Top Story
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டமூல முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

எமது சகோதர செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

காலத்துக்கு காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக அறிவிக்கின்றன.

எனினும் அரசியலுக்கு அப்பால் தேசிய நலன் என்ற அடிப்படையில் குறித்த முன்மொழிவு வலுப்படுத்தப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

පාස්කු කුමන්ත්‍රණය ගැන ආණ්ඩුවේ අලුත් මොළකාරයා ගොඩ බැසීම - srihanda.lk | Sri  Handa News Official Web Site|Sri Lanka News|News Sri Lanka|Online Sinhala  News

தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் இலங்கையில் சட்டங்கள் வலுவிழக்கும்போது, அவர்களின் எழுச்சி பெறக்கூடும்
நாட்டில் அவர்கள் சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் பகிரங்கமாகவே நடத்தப்படுகின்றன.

National Defence College Sri Lanka

அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் வலுப்பெற்றுள்ளன
எனவே அரசாங்கம் புதிய சட்டத்தின்மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்றும் ரொஹான் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் பயங்கரவாத செயற்பாடுகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளமையால், அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று அவர் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

விபரங்களுக்கு
General20 February 2026
சட்டங்கள் வலுவிழந்தால் மீண்டும் அவர்கள் எழுச்சி பெறக்கூடும்!


International News

வேற்று கிரகவாசிகள் விவகாரம் - ஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

International 20 February 2026
வேற்று கிரகவாசிகள் விவகாரம் - ஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

சூடான் இனவழிப்பு - ஆதாரங்களுடன் அதிரடியாய் அறிவித்தது ஐ.நா

International 20 February 2026
சூடான் இனவழிப்பு - ஆதாரங்களுடன் அதிரடியாய் அறிவித்தது ஐ.நா

விடுதலையானாலும் ஆண்ட்ரூவைச் சூழ்ந்துள்ள சவால்கள்!

International 20 February 2026
 விடுதலையானாலும் ஆண்ட்ரூவைச் சூழ்ந்துள்ள சவால்கள்!

அனைத்து நோய்களுக்கும் மூக்கு வழி தடுப்பு மருந்து - சாதித்த இலங்கையர்

International 20 February 2026
அனைத்து நோய்களுக்கும் மூக்கு வழி தடுப்பு மருந்து - சாதித்த இலங்கையர்

ட்ரம்பின் அமைதி சபை ஐ.நா சபையை ஓரம்கட்டுமா?

International 20 February 2026
 ட்ரம்பின் அமைதி சபை ஐ.நா சபையை ஓரம்கட்டுமா?

ட்ரம்ப்பின் அதிரடி காலக்கெடு - காத்திருக்கும் உலகம்!

International 20 February 2026
  ட்ரம்ப்பின் அதிரடி காலக்கெடு - காத்திருக்கும் உலகம்!

ஓய்வுக்கால நிதியை விழுங்குமா விலைவாசி உயர்வு?

International 20 February 2026
ஓய்வுக்கால நிதியை விழுங்குமா விலைவாசி உயர்வு?

பிற நாட்டவருக்கு ஒரு நீதி, ஈழத் தமிழருக்கு ஒரு நீதியா?

International 20 February 2026
பிற நாட்டவருக்கு ஒரு நீதி, ஈழத் தமிழருக்கு ஒரு நீதியா?

சகோதரரின் கைது தொடர்பில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் அறிக்கை

International 20 February 2026
சகோதரரின் கைது தொடர்பில்  பிரித்தானிய மன்னர் சார்லஸ் அறிக்கை

ஸிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மகன் கைது

International 19 February 2026
 ஸிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மகன் கைது

அமெரிக்க சுதந்திர தினம் - ஏதிலிகளுடன் செலவிட பாப்பரசர் 14ஆம் லியோ முடிவு

International 19 February 2026
அமெரிக்க சுதந்திர தினம் - ஏதிலிகளுடன் செலவிட பாப்பரசர் 14ஆம் லியோ முடிவு

சிறுவர்களின் மன அழுத்தத்திற்கு மெட்டா காரணமா? - நீதிமன்றத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் சாட்சியம்!

International 19 February 2026
சிறுவர்களின் மன அழுத்தத்திற்கு மெட்டா காரணமா? - நீதிமன்றத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் சாட்சியம்!

பாராலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்கும் யுக்ரைன் அதிகாரிகள் – சர்வதேச விளையாட்டு அரங்கில் வெடித்தது புதிய சர்ச்சை!

International 19 February 2026
பாராலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்கும் யுக்ரைன் அதிகாரிகள் – சர்வதேச விளையாட்டு அரங்கில் வெடித்தது புதிய சர்ச்சை!

பிரித்தானியா அதிரடி -அனுமதியற்ற தவறானபுகைப்படங்களை நீக்க 48 மணிநேரக் கெடு!

International 19 February 2026
பிரித்தானியா அதிரடி -அனுமதியற்ற தவறானபுகைப்படங்களை நீக்க 48 மணிநேரக் கெடு!

பிரித்தானிய சிறுவர் வறுமை புள்ளிவிபரங்களில் திருத்தம்: உண்மையான வறுமை நிலை குறித்து புதிய சர்ச்சை

International 19 February 2026
பிரித்தானிய சிறுவர் வறுமை புள்ளிவிபரங்களில் திருத்தம்: உண்மையான வறுமை நிலை குறித்து புதிய சர்ச்சை
More News
General20 February 2026

கடிகமுவ பகுதியில் ரூ.3 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையின் கீழ், வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ரூ. 3 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைப் புலனாய்வுப் பிரிவினர் முடக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடிகமுவ பகுதியில் வாங்கிய 14.1 பேர்ச் நிலம் மற்றும் 3 மாடி வீடு ஆகியவையே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

விபரங்களுக்கு
கடிகமுவ பகுதியில் ரூ.3 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்
General20 February 2026

புகழ்பெற்ற நடிகர் எரிக் டேன் காலமானார்

கிரேஸ் அனாடமி' (Grey's Anatomy) மற்றும் 'யூபோரியா' (Euphoria) தொடர்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் எரிக் டேன் (Eric Dane), தனது 53ஆவது வயதில் காலமானார். அவர் ALS (Amyotrophic Lateral Sclerosis) எனப்படும் நரம்பியல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
புகழ்பெற்ற நடிகர் எரிக் டேன் காலமானார்
General20 February 2026

வாகனக் கொள்வனவா? அவசரம் வேண்டாம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. புதிய வரி விதிப்பால் வாகனங்களின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படாது எனச் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே உறுதியளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஜப்பானில் வாகன விலை வீழ்ச்சி கண்டுள்ளது. அந்த விலைக்குறைப்பின் பலன் உள்ளூர் சந்தையில் பிரதிபலிக்கும் என்பதால், வரியினால் ஏற்படும் சிறு அதிகரிப்பு ஈடுசெய்யப்படும். இதன்படி, 2.5வீத வரி என்பது வாகனத்தின் பெறுமதிக்கு ஏற்ப சுமார் 75,000 முதல் 100,000 ரூபாய் வரை மட்டுமே மேலதிகமாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பல தனிநபர் இறக்குமதியாளர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்கின்றனர். எனினும்,புதிய முறையில், வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிக்கும் முன்பே துறைமுகத்தில் வரியைச் செலுத்த வேண்டும். இதனால் அரச வருமானம் அதிகரிப்பதுடன், பதிவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத அனைத்து இறக்குமதியாளர்களும் சமமாக வரி செலுத்துவது உறுதிச் செய்யப்படும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே சுட்டிக்காட்டியுள்ளார்.

விபரங்களுக்கு
வாகனக் கொள்வனவா? அவசரம் வேண்டாம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
General20 February 2026

அமெரிக்காவின் முக்கிய தளபதி இலங்கையில்!

அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler), நேற்று முதல் பெப்ரவரி 21 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். அட்மிரல் கோஹ்லர் தனது மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் இரு நாட்டுப் பாதுகாப்புப் படைகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. உலகளாவிய கடல்சார் வர்த்தகப் பாதைகளின் முக்கிய சந்தியில் இலங்கை அமைந்துள்ளதை அமெரிக்கா தனது கவனத்தில் கொண்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை பாதுகாப்புப் படைகளின் நிபுணத்துவம் மற்றும் திறன்கள் மீது அமெரிக்கா கொண்டுள்ள நம்பிக்கையை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பாதியளவு பரப்பளவில் இயங்கும் அமெரிக்க பசுபிக் கடற்படை, கடல்சார் பாதைகளைப் பாதுகாப்பதிலும் இந்து - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கை வகிக்கிறது.

விபரங்களுக்கு
அமெரிக்காவின் முக்கிய தளபதி இலங்கையில்!
General20 February 2026

உலகக் கிண்ண நாயகனுக்காகப் பரிந்து பேசுமா இலங்கை?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் விடுதலை குறித்து இலங்கையில் குரல் எழுப்பப்பட்டுள்ளது. அவருக்காக மனிதாபிமான அடிப்படையில் முறையீடு செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சிறையிலுள்ள இம்ரான் கானின் உடல்நிலை, குறிப்பாக அவரது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து அஜித் பி. பெரேரா மிகுந்த கவலை வெளியிட்டுள்ளார். இம்ரான் கானுக்கு தகுந்த மற்றும் சுயாதீனமான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இலங்கை அரசு தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தப் பிரேரணை கோருகிறது. 1992 -ல் பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தை வெல்லக் காரணமாக இருந்த இம்ரான் கான், கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்தநிலையில், அவரது விளையாட்டுப் பங்களிப்பு அரசியல் எல்லைகளைக் கடந்தது எனவும், இலங்கை கிரிக்கெட் சமூகம் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை, பாகிஸ்தான் அரசுக்கு இலங்கை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் இந்தப் பிரேரணை கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்ட 14 சர்வதேச கிரிக்கெட் அணித் தலைவர்கள் இம்ரான் கானுக்காக மனிதாபிமான முறையீட்டை விடுத்துள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டுள்ளது. எனினும் இந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலை வழங்கவில்லை.

விபரங்களுக்கு
உலகக் கிண்ண நாயகனுக்காகப் பரிந்து பேசுமா இலங்கை?
International News

வேற்று கிரகவாசிகள் விவகாரம் - ஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

International 20 February 2026
வேற்று கிரகவாசிகள் விவகாரம் - ஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

சூடான் இனவழிப்பு - ஆதாரங்களுடன் அதிரடியாய் அறிவித்தது ஐ.நா

International 20 February 2026
சூடான் இனவழிப்பு - ஆதாரங்களுடன் அதிரடியாய் அறிவித்தது ஐ.நா

விடுதலையானாலும் ஆண்ட்ரூவைச் சூழ்ந்துள்ள சவால்கள்!

International 20 February 2026
 விடுதலையானாலும் ஆண்ட்ரூவைச் சூழ்ந்துள்ள சவால்கள்!

அனைத்து நோய்களுக்கும் மூக்கு வழி தடுப்பு மருந்து - சாதித்த இலங்கையர்

International 20 February 2026
அனைத்து நோய்களுக்கும் மூக்கு வழி தடுப்பு மருந்து - சாதித்த இலங்கையர்

ட்ரம்பின் அமைதி சபை ஐ.நா சபையை ஓரம்கட்டுமா?

International 20 February 2026
 ட்ரம்பின் அமைதி சபை ஐ.நா சபையை ஓரம்கட்டுமா?

ட்ரம்ப்பின் அதிரடி காலக்கெடு - காத்திருக்கும் உலகம்!

International 20 February 2026
  ட்ரம்ப்பின் அதிரடி காலக்கெடு - காத்திருக்கும் உலகம்!

ஓய்வுக்கால நிதியை விழுங்குமா விலைவாசி உயர்வு?

International 20 February 2026
ஓய்வுக்கால நிதியை விழுங்குமா விலைவாசி உயர்வு?

பிற நாட்டவருக்கு ஒரு நீதி, ஈழத் தமிழருக்கு ஒரு நீதியா?

International 20 February 2026
பிற நாட்டவருக்கு ஒரு நீதி, ஈழத் தமிழருக்கு ஒரு நீதியா?

சகோதரரின் கைது தொடர்பில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் அறிக்கை

International 20 February 2026
சகோதரரின் கைது தொடர்பில்  பிரித்தானிய மன்னர் சார்லஸ் அறிக்கை

ஸிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மகன் கைது

International 19 February 2026
 ஸிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மகன் கைது

அமெரிக்க சுதந்திர தினம் - ஏதிலிகளுடன் செலவிட பாப்பரசர் 14ஆம் லியோ முடிவு

International 19 February 2026
அமெரிக்க சுதந்திர தினம் - ஏதிலிகளுடன் செலவிட பாப்பரசர் 14ஆம் லியோ முடிவு

சிறுவர்களின் மன அழுத்தத்திற்கு மெட்டா காரணமா? - நீதிமன்றத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் சாட்சியம்!

International 19 February 2026
சிறுவர்களின் மன அழுத்தத்திற்கு மெட்டா காரணமா? - நீதிமன்றத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் சாட்சியம்!

பாராலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்கும் யுக்ரைன் அதிகாரிகள் – சர்வதேச விளையாட்டு அரங்கில் வெடித்தது புதிய சர்ச்சை!

International 19 February 2026
பாராலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்கும் யுக்ரைன் அதிகாரிகள் – சர்வதேச விளையாட்டு அரங்கில் வெடித்தது புதிய சர்ச்சை!

பிரித்தானியா அதிரடி -அனுமதியற்ற தவறானபுகைப்படங்களை நீக்க 48 மணிநேரக் கெடு!

International 19 February 2026
பிரித்தானியா அதிரடி -அனுமதியற்ற தவறானபுகைப்படங்களை நீக்க 48 மணிநேரக் கெடு!

பிரித்தானிய சிறுவர் வறுமை புள்ளிவிபரங்களில் திருத்தம்: உண்மையான வறுமை நிலை குறித்து புதிய சர்ச்சை

International 19 February 2026
பிரித்தானிய சிறுவர் வறுமை புள்ளிவிபரங்களில் திருத்தம்: உண்மையான வறுமை நிலை குறித்து புதிய சர்ச்சை
Sports Stories
Explore More
மீண்டு வந்த கனேடிய மகளிர் அணி!

மீண்டு வந்த கனேடிய மகளிர் அணி!

2026 மிலானோ கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், கனடாவின் ரேச்சல் ஹோமன் தலைமையிலான மகளிர் கர்லிங் அணி அபாரமாகச் செயற்பட்டு அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை சுற்றின் கடைசி ஆட்டத்தில், தென் கொரியாவின் அணியை கனடா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கனடா 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், கடைசி ஐந்து ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 6-3 என்ற கணக்கில் கனடா பலமாக மீண்டு வந்துள்ளது. இந்தநிலையில், அரையிறுதியில் கனடா அணி, சுவீடனின் அன்னா ஹசல்போர்க் அணியை எதிர்கொள்கிறது. இந்த அரையிறுதி ஆட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

விபரங்களுக்கு
2028 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை நேரடித் தகுதி: சூப்பர் 8 சுற்றின் மூலம் உறுதி

2028 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை நேரடித் தகுதி: சூப்பர் 8 சுற்றின் மூலம் உறுதி

2026 ஐ.சி.சி. ஆண்கள் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள அணிகள், 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.இன்று (18) நடைபெற்ற நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியுடன், 'சூப்பர் 8' சுற்றில் விளையாடவுள்ள 8 அணிகளும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன.அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு மொத்தம் 12 அணிகள் நேரடியாகத் தகுதி பெறுகின்றன. தற்போதைய தொடரில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் ஸிம்பாப்வே ஆகிய 8 அணிகளும் 2028 தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.மார்ச் 9 ஆம் திகதி நிலவரப்படியான ஐ.சி.சி. தரவரிசையின் அடிப்படையில் அடுத்த சிறந்த 3 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும். இதன்படி பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் இந்த இடங்களைப் பிடிக்கவுள்ளன.2028 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. மீதமுள்ள 8 இடங்களுக்கான அணிகள் பிராந்திய ரீதியிலான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.இலங்கையைப் பொறுத்தவரை, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்ததன் மூலம், அடுத்த உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதையும் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் அணி இன்று நமீபியாவை 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இடத்தை உறுதி செய்தது.

விபரங்களுக்கு
சாஹிப்சதா ஃபர்ஹான் அதிரடி சதம் - நமீபியா அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

சாஹிப்சதா ஃபர்ஹான் அதிரடி சதம் - நமீபியா அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 35 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.கொழும்பில் நடைபெறும் குறித்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா ஆகிய அணிகள் மோதுகின்றன.இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சார்பில் சாஹிப்சதா ஃபர்ஹான் 100 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொடுத்தார்.இந்தநிலையில் நமீபியா அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

விபரங்களுக்கு
தென்னாப்பிரிக்க அணிக்கு 123 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

தென்னாப்பிரிக்க அணிக்கு 123 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 34ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடைபெறும் குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றது. இந்தநிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு 123 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
கௌதம் கம்பீரின் பதவிக் காலம் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கௌதம் கம்பீரின் பதவிக் காலம் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பதவிக் காலம் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்பீரின் தற்போதைய ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கிண்ணத்துடன் முடிவடைகிறது. இருப்பினும், சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவரது பதவிக்காலம் 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் வரை நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணம் ஆகியவற்றில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே இந்த நீடிப்பு சாத்தியமாகும். 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் ஒலிம்பிக்கில் மீண்டும் சேர்க்கப்படுவதால், இந்திய அணிக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தருவதை கம்பீர் தனது ஒரு முக்கிய இலக்காகக் கொண்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

விபரங்களுக்கு
வரலாறு படைத்த 19 வயது இளைஞன் - மிரள வைத்த கனடா வீரர்

வரலாறு படைத்த 19 வயது இளைஞன் - மிரள வைத்த கனடா வீரர்

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கனடா அணியின் இளம் வீரரான யுவராஜ் சாம்ரா சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான குறித்த போட்டியில் வெறும் 58 பந்துகளில் அவர் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். தனது 19 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம், டி20 உலகக் கிண்ண வரலாற்றில் சதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷெஷாத் தனது 22 வயதில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது 19 வயதிலேயே சதம் அடித்து யுவராஜ் சாம்ரா அதனை முறியடித்துள்ளார். இந்த வரலாற்று சாதனை மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தைக் கனடா அணியின் பக்கம் யுவராஜ் சாம்ரா திருப்பியுள்ளார்.

விபரங்களுக்கு
நீண்ட நாள் கனவு நனவானது - பெத்தும் நிஸ்ஸங்க நெகிழ்ச்சி

நீண்ட நாள் கனவு நனவானது - பெத்தும் நிஸ்ஸங்க நெகிழ்ச்சி

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முக்கியமான போட்டியில் வெற்றி பெற்று, இலங்கை அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.   இந்த வெற்றியின் நாயகன் பெத்தும் நிஸ்ஸங்க, அணியின் திட்டமிடல் மற்றும் கள நிலவரம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். போட்டிக்கு பின்னரான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "நாங்கள் ஏற்கனவே இந்த மைதானத்தில் விளையாடியுள்ளோம், எனவே ஆடுகளத்தின் தன்மை எங்களுக்கு நன்றாகத் தெரியும். முதலில் பந்துவீசுவது என்ற முடிவு சரியானது என்பதை நிரூபித்துள்ளோம்," என குறிப்பிட்டார். அவுஸ்திரேலியா நிர்ணயித்த 181 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது. இந்த உலகக் கிண்ணத் தொடரில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெத்தும் நிஸ்ஸங்க பெற்றார். "உலகக் கிண்ணத்தில் சதம் அடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் இலக்கு, அதை இன்று அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது," என பெத்தும் நிஸ்ஸங்க நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஆட்டத்தின் பிற்பகுதியில் பனிப்பொழிவு (Dew) இருக்கும் என்பதை அறிந்து, முதல் 12 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்க்கத் திட்டமிட்டதாக அவர் கூறினார். மேலும் சதம் அடித்த பிறகு விரலை உதட்டில் வைத்து அமைதியாக இருக்கும்படி அவர் செய்த கொண்டாட்டம் (Shush Celebration) யாரையும் குறிவைத்தது அல்ல என்றும், அது தனது வழக்கமான பாணி என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அத்துடன் "பல்லேகல மைதானத்தில் ரசிகர்கள் தந்த ஆதரவு எங்களுக்குப் பெரும் ஆற்றலைத் தந்தது எனவும் இதேபோன்ற ஆதரவை அடுத்தடுத்த போட்டிகளிலும் வழங்க வேண்டும்," எனவும் பெத்தும் நிஸ்ஸங்க கோரிக்கை விடுத்தார்.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
மாணவர்களின் கல்விக்காக 2 மணிநேர டிஜிட்டல் தடை -  இந்தியக் கிராமங்களின் அதிரடி கல்விப் புரட்சி!

மாணவர்களின் கல்விக்காக 2 மணிநேர டிஜிட்டல் தடை - இந்தியக் கிராமங்களின் அதிரடி கல்விப் புரட்சி!

தற்கால டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ள நிலையில், அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக இந்தியக் கிராமங்கள் முன்மாதிரியான நடைமுறையொன்றைக் கையில் எடுத்துள்ளன.   இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிம்பல்குதா கிராமத்திலேயே இந்த சுவாரசியமான கல்விப் புரட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   7 மணி மணியோசையும் 2 மணிநேர நிசப்தமும்   குறித்த கிராமத்தில் தினமும் மாலை சரியாக 7 மணியானதும், கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு பெரிய மணி ஒலிக்கச் செய்யப்படுகிறது. அந்தச் சத்தம் கேட்ட அடுத்த வினாடியே, கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் அணைக்கப்படுவதோடு, கையடக்கத் தொலைபேசிகளும் ஓரங்கட்டப்படுகின்றன.   இரவு 9 மணி வரை நீடிக்கும் இந்த 2 மணிநேரக் காலப்பகுதியில், அந்த ஊரே ஒரு 'நிசப்த மண்டலமாக' (Silence Zone) மாற்றப்பட்டு, மாணவர்கள் தடையின்றிப் படிப்பதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது.   வீடு வீடாகச் செல்லும் விசேட கண்காணிப்புக் குழு   வெறும் மணியோசையுடன் மட்டும் இந்தத் திட்டம் நிறைவடைவதில்லை. யாராவது திருட்டுத்தனமாகத் தொலைக்காட்சி பார்க்கிறார்களா அல்லது கையடக்கத் தொலைபேசிகளில் மூழ்கியிருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க, பஞ்சாயத்துத் தலைவர் கஜானன் தலைமையில் ஒரு விசேட குழு களத்தில் இறங்குகிறது.   இந்தக் குழுவினர் ஒவ்வொரு வீடாகச் சென்று, மாணவர்கள் அந்த நேரத்தில் உண்மையாகவே படிக்கிறார்களா என்பதை நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்துகின்றனர்.   திட்டத்தின் நோக்கம்   கையடக்கத் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சிப் பயன்பாட்டால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுப்பதே இந்த 2 மணிநேர 'டிஜிட்டல் தடை'யின் பிரதான நோக்கமாகும். "எதிர்கால சந்ததிக்கு ஒரு சிறந்த கல்வியை வழங்க வேண்டும்" என்பதே தமது கிராம மக்களின் ஒரே இலக்கு எனப் பஞ்சாயத்துத் தலைவர் கஜானன் தெரிவித்துள்ளார்.  

விபரங்களுக்கு
134 படப் பாடல்களுக்கு உரிமை கோர இளையராஜாவுக்கு நீதிமன்றம் தடை

134 படப் பாடல்களுக்கு உரிமை கோர இளையராஜாவுக்கு நீதிமன்றம் தடை

இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமை தனக்கே சொந்தம் எனக் கூறி வரும் நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக ஒரு இடைக்காலத் தடையை விதித்துள்ளது. சரிகம (Saregama) இசை நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் (Sound Recording Rights) தங்களுக்குச் சொந்தமானது எனச் சரிகம நிறுவனம் வாதிட்டது. அந்தந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறையாக ஒப்பந்தம் செய்து, உலகளாவிய ரீதியில் நிரந்தரமான காப்புரிமையைத் தாங்கள் பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி Amazon Music, iTunes, JioSaavn போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியமை சட்டவிரோதமானது எனச் சரிகம தரப்பு வாதிட்டது.ஒரு திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட இசைக்கு அந்தத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்ற இந்தியாவின் 1957 ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின் விதியைச் சரிகம தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர் துஷார் ராவ் கெடேலா (Justice Tushar Rao Gedela), குறிப்பிட்ட 134 படப் பாடல்களை இளையராஜா பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.இந்த உத்தரவு காரணமாக, இனி வரும் காலங்களில் அந்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான உரிமங்களை இளையராஜா தரப்பு தன்னிச்சையாக வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சேயோனாக மிரட்டும் சிவகார்த்திகேயன்: 'SK26' படத்தின் முதல் பார்வை வெளியீடு!

சேயோனாக மிரட்டும் சிவகார்த்திகேயன்: 'SK26' படத்தின் முதல் பார்வை வெளியீடு!

நடிகர் சிவகார்த்திகேயனின் 26 ஆவது திரைப்படத்திற்கு 'சேயோன்' எனப் பெயரிடப்பட்டு, அதன் முதல்பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 'அமரன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இந்த திரைப்படத்தைத் தயாரிக்கின்றன. இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான கொண்டாட்டங்கள் நாளை (17) காலை 10 மணி முதல் தொடங்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விபரங்களுக்கு
ஜன நாயகன் திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பில்லை

ஜன நாயகன் திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பில்லை

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியாக வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது. தணிக்கைக் குழுவின் (Censor Board) அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் விநியோக உரிமையைப் பெற்றுள்ள யோர்க் சினிமாஸ் (York Cinemas) நிர்வாகம் இது குறித்து வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பில், ஜன நாயகன்' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாகத் திரையிடப்படமாட்டாது.ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான பணம் மீள வழங்கப்படாதவர்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட திரையரங்குகளைத் தொடர்புகொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.புதிய வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டதும், யோர்க் சினிமாஸ் அங்கத்தவர்களுக்கு டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை வழங்கப்படும்.தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சட்டப் போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது இந்த திரைப்படம் மறுஆய்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. இதனால் படம் வெளியாவதில் மேலும் சில வாரங்கள் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் பார்க்கவும்.. 

விபரங்களுக்கு
சினிமாவில் 25 ஆண்டுகள்…இன்னும் நிறைவேறாத அந்த கனவு - மனம் திறந்த நடிகை

சினிமாவில் 25 ஆண்டுகள்…இன்னும் நிறைவேறாத அந்த கனவு - மனம் திறந்த நடிகை

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவரும் நடிகை ஸ்ரேயா சரண், இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஒரு மகளுக்கு தாயான ஸ்ரேயா, தற்போது தாய் மற்றும் மனைவி போன்ற வேடங்களில், மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பைத் தவிர, அவர் பயிற்சி பெற்ற ஒரு பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார். இதற்கிடையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நடனம்தான் தனது முதல் காதல் என தெரிவித்தார். இதுவரை நடிக்க வாய்ப்பு கிடைக்காத, இன்னும் கனவாக இருக்கும் ஒரு கதாபாத்திரம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, அவர் “ஒரு நடனக் கலைஞரின் வேடம்” என கூறினார். ’ஒரு நடனக் கலைஞரின் வாழ்க்கை, பயணம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க விரும்புகிறேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
அஜித்தை சந்தித்த சிலம்பரசன் - பின்னணி என்ன?

அஜித்தை சந்தித்த சிலம்பரசன் - பின்னணி என்ன?

இயக்குநர் வெற்றிமாறனின் "அரசன்" திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நடிகர் சிலம்பரசன், அண்மையில் டுபாயில் நடிகர் அஜித் குமாரைச் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். நகைக்கடை திறப்பு விழாவுக்காக டுபாய் சென்றிருந்த சிலம்பரசன், அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித் குமாரைச் சந்தித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "அஜித்தை நீண்ட நாட்களாக சந்திக்க திட்டமிட்டிருந்தேன். பயிற்சியின் போது அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், அனுமதி கேட்டுப் பின் சந்தித்தேன்" என்றார். இந்த சந்திப்பால் அஜித் குமார் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்ட சிலம்பரசன், தனது சிற்றூந்து பந்தயம் குறித்த விரிவான தகவல்களை அஜித் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். இவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசன் திரைப்படத்தைத் தொடர்ந்து, சிலம்பரசன் அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபரங்களுக்கு
கரகாட்டக்காரன் - 2 படம் வருமா? : இயக்குநர் கங்கை அமரன் பதில்

கரகாட்டக்காரன் - 2 படம் வருமா? : இயக்குநர் கங்கை அமரன் பதில்

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வசூல் சாதனை செய்தது. இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்து, நகைச்சுவை அலைவரிசைகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ‘மீன்முள்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கங்கை அமரன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சினிமாவில் இதுவரை 1,800 பாடல்களை எழுதியுள்ளதாகவும், அவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த புத்தகத்தை இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பின்னர், ‘கரகாட்டக்காரன்-2’ படம் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கங்கை அமரன், கவுண்டமணிக்கு தற்போது உடல்நலம் சரியில்லை, செந்தில் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை, ராமராஜனின் தோற்றம் மாறிவிட்டதாகவும், கனகாவும் உடல் எடையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இவர்கள் அனைவரையும் வைத்து மீண்டும் படம் எடுத்தால் அது நன்றாக இருக்காது என்பதால் ‘கரகாட்டக்காரன்-2’ உருவாகாது என்று அவர் கூறினார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////